அரசியல் உலகம் செய்திகள்

குழந்தைகளே செய்யக்கூடிய 12 Business Ideas

குழந்தைகளே செய்யக்கூடிய 12 Business Ideas

குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் மட்டும் ஈடுபடாமல் , சிறிய அளவிலான வியாபாரங்களை ஆரம்பித்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியும். பிள்ளைகளுக்கான வியாபார எண்ணங்கள், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து, சுயநம்பிக்கை மற்றும் பொறுப்புகளை வளர்க்க உதவுகின்றன.

1. Fresh Lemonade stand:

  • தேன் மற்றும் பல வகையான Fresh Lemonade தயாரித்து, அருகிலுள்ள தெருவில், பூங்காவில் அல்லது பள்ளி அருகே சிறிய விற்பனை கடை (stand) அமைத்து விற்பனை செய்யலாம். இது ஒரு எளிமையான வியாபாரம் ஆகும்.
  • இதன் மூலம் குழந்தைகளுக்கு தங்கள் தயாரிப்பை விற்பனை செய்யும் அனுபவம், நம்பிக்கை, மற்றும் வாடிக்கையாளர் சேவையை கற்றுக் கொள்ள உதவும். மேலும், சில இனிப்பு மற்றும் கார வகைகள் சேர்த்து விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

2. Baked Goods:

  • பிஸ்கெட், கேக், டிக்கி, பண்டிகை பலகாரங்கள் போன்றவற்றை செய்து விற்பனை செய்யலாம்.
  • குழந்தைகள், வீட்டில் தயாரித்த உணவுகளை, பொதுவாக பண்டிகை நேரங்களில், பிறருக்கு சிறிய ஆர்டர்கள் எடுத்து செய்து கொடுத்து தங்களின் வியாபாரத்தை தொடங்கலாம்.

3. Handmade Art and Crafts:

  • Motivational கார்டுகள், கைவினை பொருட்கள், jewelry போன்றவற்றை எளிதில் தயாரித்து விற்பனை செய்யலாம்.
  • குழந்தைகள் தங்களின் கலை திறன்களை பயன்படுத்தி அதனை நண்பர்களுக்கு அல்லது (Instagram, Facebook) போன்ற தளங்களில் விற்பனை செய்யலாம்.

4.Tutoring Services:

  • கணிதம், அறிவியல், மொழிகள் போன்ற பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்ற குழந்தைகள், மற்ற குழந்தைகளுக்கான டயூஷன் வகுப்புகள் நடத்தலாம்.
  • ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதன் மூலம் மற்றவர்கள் குறைந்த செலவில் கற்றுக்கொள்ள முடியும்.

5. Photography & Video Editing Service:

  • குழந்தைகள் தங்களின் புகைப்பட கலை மற்றும் வீடியோ எடிடிங் திறமைகளை பயன்படுத்தி, குடும்ப நிகழ்ச்சிகள், பிறந்த நாள் பார்ட்டிகளுக்கு, தங்களுடைய youtube-க்கு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடிட் செய்து சேவையை வழங்கலாம்.
  • படங்களை எடுத்து அவற்றை கணினி மென்பொருள் (e.g. Adobe Photoshop, iMovie) மூலம் எளிமையாக எடிட் செய்து,சிறந்த வீடியோக்களை உருவாக்கி விற்பனை செய்யலாம்.

6.Gardening:

  • பச்சை கீரைகள், தாவரங்கள் அல்லது பழங்களை வளர்த்து விற்பனை செய்யலாம்.
  • இது சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும், குழந்தைகள் உள்ளூர் சந்தைகளில் இவற்றை விற்பனை செய்து வருமானம் ஈட்ட முடியும்.

7.Starting a YouTube Channel

  • யூடியூப் சேனல் தொடங்குவதன் மூலம் கலை, கதைகள்,science projects போன்றவற்றை பதிவிடலாம்.
  • அது பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தால், அதிக வருமானம் ஈட்ட முடியும்.

8. Gift Baskets:

  • பிறந்த நாள் பரிசுகள், திருமணம் நாள் பரிசுகள், புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் பரிசு பெட்டிகள் தயாரித்து விற்பனை செய்யலாம்.
  • இந்த பரிசு பெட்டிகளில் சின்ன கைவினைபொருட்கள், இனிப்புகள், போன்றவற்றையும் சேர்ந்து அழகான ஒரு தொகுப்பாக விற்கலாம் .

9. Personal Skill Development Classes:

  • குழந்தைகள் மற்ற குழந்தைகளுக்கு பாட்டு, நடனம், யோகா மொழிகள்,விளையாட்டு கற்றுக்கொள்ளும் வகுப்புகளை ஆன்லைனில் நடத்தலாம்.
  • இது அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாரிக்கவும் முடியும்.

10. Tech help for seniors :

  • வயதில் மூத்தவர்கள் உட்கார்ந்து பயன்படுத்த கூடிய எளிமையான technology மற்றும் WhatsApp, Zoom, Facebook போன்ற App-களை பயன்படுத்த உதவிக்குறிப்புகளை வழங்குதல்.
  • அவர்களுக்கு internet safety, password management மற்றும் super subscription alerts போன்றவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள உதவியாக இருப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

11. Renting toys and Equipment :

  • குழந்தைகள் விரும்பும் விளையாட்டு பொருட்களை, அதன் தேவையைப் பொறுத்து வாடகைக்கு அளிப்பது. இது அதிகம் செலவிடாமல் பலவிதமான விளையாட்டுகளை அனுபவிக்க உதவும்.
  • பிறந்த நாள் விழாக்களுக்கு விளையாட்டு பொருட்களை, (e.g.பூங்கா வண்டிகள், பந்தங்கள், சிறிய சினிமா பொருட்கள்) போன்றவை வாடகைக்கு தருவது, பொருட்களை குறைந்த நேரத்தில் அதிகம் பயன்படுத்தவும் உதவுகின்றன.
  • இதன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம்.

12. sticker making :

  • குழந்தைகள் தங்கள் கலை, படங்கள், அல்லது வடிவமைப்புகளை sticker-களாக உருவாக்கி, அதனை விற்பனை செய்யலாம்.
  • இதன் மூலம், தன்னுடைய படைப்புகளை உலகத்திற்கு அறிமுகப்படுத்த முடியும்.
  • online marketplaces (Facebook, Instagram) போன்ற தளங்களில் தங்களுடைய ஸ்டிக்கர்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம், நிறைய business வாய்ப்புகள் உருவாக்கலாம்.

இந்த புதிய வியாபார எண்ணங்கள், குழந்தைகளுக்கு அவர்களது திறமைகளை வெளிப்படுத்த, எதிர்காலத்தில் சிறந்த entrepreneur-ஆக மாற உதவுவது மட்டுமல்லாமல் நம்பிக்கை, படைப்பாற்றல், பொறுப்பை வளர்க்கவும் உதவும்.

Leave a Comment