• Home
  • செய்திகள்
  • எவ்வளவு இழப்புகள் வந்தாலும் உறுதியோடு தியாகங்களைச் செய்பவர்களுக்கு இறையருள் கிடைக்கும்.. TTV தினகரன் பக்ரீத் வாழ்த்துக்கள்
அரசியல் இந்தியா செய்திகள்

எவ்வளவு இழப்புகள் வந்தாலும் உறுதியோடு தியாகங்களைச் செய்பவர்களுக்கு இறையருள் கிடைக்கும்.. TTV தினகரன் பக்ரீத் வாழ்த்துக்கள்

TTV Dhinakaran Bakrid

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் Bakrid

“தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும்
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த
வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


உலகில் பிற எல்லாவற்றையும்விட தியாகத்திற்கு எப்போதும் தனி
மதிப்பு இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பக்ரீத்
கொண்டாடப்படுகிறது. எவ்வளவு இழப்புகள் வந்தாலும் மாற்றுக்குறையாத
அன்போடும், மாறாத உறுதியோடும் தியாகங்களைச் செய்பவர்களுக்கு
முழுமையான இறையருள் கிடைக்கும் என்பதற்கு பக்ரீத் திருநாள் சாட்சியாக
இருக்கிறது. ஏனெனில் தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும்
வலிமையும் அத்தனை உயர்வானது. எவ்வளவு அநீதிகள், நெருக்கடிகள்,
அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் அதையெல்லாம் மீறி தியாகத்தின்
பெருமை மேலெழுந்து வரும். அதனை யாராலும் மறைத்திடவோ,.
மாற்றிடவோ முடியாது.


அந்த வகையில், இறை தூதர் இப்ராகிம் அவர்களின் தியாகத்தைப்
போற்றும் இப்புனித நாளில் நமக்காக தியாகங்களைப் புரிந்தவர்களை
நன்றியோடு நினைத்து பார்ப்போம். மனித சமுதாயத்தின் மலர்ச்சிக்கும், சக
மனிதர்களின் நல்வாழ்வுக்கும் அவரவர் அளவில் இயன்ற தியாகத்தையும்,
தர்மத்தையும் செய்து, சாதி, மத வேற்றுமைகளை மறந்து அனைவரும்
ஒற்றுமையோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்திடுவோம்.” என Twitter-ல் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related posts

சைபர் வார்! அமமுக IT Wing-கை சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக

Admin

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு அறிவிப்பு

Admin

அமமுக தொண்டர்களின் மக்கள் சேவை – உணவு முதல் வீடு வரை தானமாக கொடுத்து நெகிழ்ச்சி

Admin

Leave a Comment