• Home
  • அரசியல்
  • இதுவரை இன்று – 15 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இதுவரை இன்று – 15 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும்.மூன்றாவது அலையின் தாக்கம் குறைவாகவே இருக்கும் – மருத்துவர் சமீரன் பாண்டா, தொற்று நோய்கள் பிரிவு தலைவர், ஐசிஎம்ஆர்.

மேகதாது அணை கூடாது என்பதில் பாஜக உறுதி – அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்.

தமிழ்நாடு முழுவதையும் 12 மண்டலங்களாக பிரித்து மண்டல திட்டங்கள் உருவாக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலி; கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 14,000 கனஅடி நீர் திறப்பு.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்கான பணிகள் துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன – டெல்லியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் செப்டம்பர் 15ம் தேதிக்குள்  உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் – பெரியகருப்பன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.

தமிழகத்தில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா தொற்று : தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 49 பேர் உயிரிழப்பு.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த பிறகும் ‘தேசவிரோதச் செயல் சட்டம்’ இந்தியாவில் தேவைப்படுகிறதா ? – உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கேள்வி.

இந்தியாவிற்கு தனியாக தேசிய மொழி இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார் முதல்வர் தேதி சொன்னவுடன் அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்.

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா : மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கி, அடிக்கல் நாட்ட வருமாறு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்.

அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது.துணிந்து நில்,
மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி : சொகுசு கார் வரி விவாகரத்தில் நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் சீமான் ஆதரவு.

தமிழ்நாட்டில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைப்பு : நடப்பாண்டு முதல் செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

அமைச்சர் முருகனின் கட்டுப்பாட்டில்தான் மீடியாக்கள் வருகிறது.அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம், கையில் எடுக்கலாம் – பாஜக தலைவர் அண்ணாமலை.

ஆளில்லா வான்வழி விதிகள் -2021க்கு பதிலாக ‘புதிய ட்ரோன் வரைவு மசோதா, 2021’-ஐ விமான போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை : இதன்படி ட்ரோன்களுக்கு தனித்துமான எண்கள் வழங்குவது,நிகழ் நேர கண்காணிப்பு உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து, ஈராக்கில் உள்ள தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெற உள்ளதாக தகவல்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜே.இ.இ. 3 மற்றும் 4ஆம் கட்ட தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி வழங்க அறிவுறுத்தல் – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

ஜே.இ.இ. 4ஆம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 20ஆம் தேதி வரை நீட்டிப்பு – கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

புதுச்சேரியில் வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – 50% சுற்றுலா பயணிகளுடன் சுற்றுலா தலங்கள் இயங்கலாம் என அறிவிப்பு.

டெல்லியில் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

Related posts

இதுவரை இன்று – 14 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

இதுவரை இன்று – 8 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

இதுவரை இன்று – 7 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

Leave a Comment