• Home
  • அரசியல்
  • “விளக்கு ஏற்ற மாட்டோம்” – அடம் பிடிக்கும் நெட்டிசன்கள்
அரசியல் இந்தியா செய்திகள்

“விளக்கு ஏற்ற மாட்டோம்” – அடம் பிடிக்கும் நெட்டிசன்கள்

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி அன்று தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையை பேசினார். அப்பொழுது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்சார விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச், அகல்விளக்கு போன்றவற்றை ஒளிரச் செய்து நம்முடைய ஒற்றுமையைக் காட்டுங்கள்’என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடி, இதற்கு முன்னர்  அனைவரையும் கை தட்ட சொல்லி அதன் விளைவாக நடந்த விழிப்புணர்வற்ற சம்பவங்கள் பலரின் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளாயின. இதை தொடர்ந்து மோடியின் இந்த அறிவிப்பையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விமர்சங்களின் ஒரு பகுதியாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் “#விளக்கு_ஏற்ற_மாட்டோம்” என்றும் “#Hum_Light_Nahi_Bujhaenge” என்றும் தற்பொழுது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மேலும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் பல மீம்ஸ்களும் இணைய தளத்தில் உலாவி வருகின்றன.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி நீங்கள் விளக்கு ஏற்றுவீர்களா? என்பதை உங்கள் கருத்துக்களாக கீழ் உள்ள இல் தெரிவிக்கவும்.

Related posts

“பிரதமர் மோடியை போல செயல்படுங்கள்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

Admin

விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்

Admin

Leave a Comment