• Home
  • அரசியல்
  • 8ம் வகுப்பு மாணவனின் தற்கொலைக்கு பிறகு அரசு எடுத்த முடிவு – 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

8ம் வகுப்பு மாணவனின் தற்கொலைக்கு பிறகு அரசு எடுத்த முடிவு – 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

2018-19ம் கல்வியாண்டில் இருந்து ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

அனைத்து குழந்தைகளும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளித்து வருகிறது. ஆனால், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்று பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய தேர்வு முறை தொடரும் என்றும் கூறினார்.

நீட் தேர்வை மத்திய அரசு தமிழகத்திற்கு கொண்டு வந்த பொது நீட் தேர்வு தமிழகத்திற்கு வராது என்று எடப்பாடி பழனிசாமி அரசு மாணவர்களை குழப்பியது. இதனால் அனிதா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதே போல் பொதுத்தேர்வு வருவதையோட்டி வீட்டில் டிவி கேபிள் இணைப்பை பெற்றோர் துண்டித்தால் சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணைப் பகுதியைச் சேர்ந்த 8 வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசு இந்த பொது தேர்வை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் K.A.செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆதித்தமிழர் பேரவையினர் கைது

Admin

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment