மக்களிடையே யாருக்கு செல்வாக்கு என நிரூபிக்க தம்முடன் கிராமங்களுக்கு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது திறந்த வேனில் நின்றபடி மக்களிடையே பேசிய உதயநிதி ஸ்டாலின், எட்டு வழிச்சாலை திட்டம் உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு கோடி ரூபாய் சாப்பாட்டு பில் வந்ததை சுட்டிக்காட்டி, அதிமுக மற்றும் அமமுகவினரை விமர்சித்தார்.
யாருக்கு செல்வாக்கு என நிரூபிக்க தம்முடன் கிராமத்திற்கு வரத்தயாரா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார்.