மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிடுவார் என இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார்.
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு பெரம்பலூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அக்கட்சியின் நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரவி பச்சமுத்து, பெரம்பலூர் தொகுதியில் கட்சி பொதுக்குழுவின் முடிவின் படி நிறுவனத் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.