கனடாவில் குழந்தை பராமரிப்புக்கான உதவி தொகையை எப்படி பெறுவது
கனடாவில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவுகளை குறைக்க, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவ கனடா அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி குழந்தை பராமரிப்பு உதவி (Child Care Benefit) ஆகும்.இந்த நிதி உதவிகள் பெற்றோர்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளை நிவர்த்தி செய்ய உதவுகின்றன. கனடாவில் நிரந்தர குடியுரிமை (permanent residents) பெற்றவர்கள் மட்டுமல்ல தற்காலிக குடியுரிமை (Temporary Residents) உடையவர்களும், குழந்தை பராமரிப்பு உதவி (Child Care Benefit) பெற முடியும், ஆனால் சில குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
1. குழந்தை பராமரிப்புக்கான உதவி தொகையை பெறுவது எப்படி
- கனடா அரசு தரும் இந்த தொகை குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளுக்கான உதவியாகும்.
- கனடாவில் வசிக்கும், 18 வயதுக்குள் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் இந்த உதவி தொகை பெற தகுதி பெறுகிறார்கள்.
- பெற்றோர்கள் ஆண்டுதோறும் தங்கள் வருமானம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், ஏனென்றால் இந்த உதவி குடும்பத்தின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது.
- 6 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு, ஆண்டு தோறும் $6,997 வரை.
- 6 முதல் 17 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு $5,903 வரை.
- இந்த தொகை, குடும்பத்தின் மொத்த வருமானம், குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் வயது போன்றவின் அடிப்படையில் மாறும்.
- குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு முழு தொகையும் வழங்கப்படும், ஆனால் அதிக வருமானம் உள்ள குடும்பங்களுக்கு குறைவாக வழங்கப்படும்.
- இந்த உதவி ஒவ்வொரு மாதமும் பங்கிட்டு தரப்படும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும், குடும்பத்தின் வருமான அடிப்படையில் தொகை மறுபரிசீலனை செய்யப்படும்.
2. குழந்தை பராமரிப்புக்கான உதவி தொகையை பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது
- நீங்கள் கனடாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆக வேண்டும்.
- உங்கள் குழந்தை 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- நீங்கள் உங்கள் வருடாந்திர வருமானம் பற்றிய அறிக்கையை CRA-க்கு (Canada Revenue Agency) தாக்கல் செய்ய வேண்டும்.
- CRA My Account மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது பேப்பர் (paper) மூலம் விண்ணப்பிக்கும் வழியும் உள்ளது.
3. தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்களுடைய குழந்தை பராமரிப்புக்கான உதவி தொகையை பெறுவது எப்படி
- தற்காலிக குடியுரிமை பெற்ற நபர்கள் கனடாவில் குடியிருப்பவர் என்ற வகையில் Canada Child Benefit (CCB) பெற தகுதி பெற முடியும்.
- நீங்கள் கனடாவில் 183 நாட்கள் அல்லது அதற்கு மேலாக கனடாவில் வாழ வேண்டும்.
- தற்காலிக குடியுரிமை பெற்ற நபர்கள் தங்கள் வருமானத்தை Canada Revenue Agency (CRA) மூலம் அறிக்கை செய்ய வேண்டும்.
- வருமான அடிப்படையில் உதவித்தொகை அளவிடப்படும், அதாவது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அதிகமாக உதவித்தொகை வழங்கப்படும்.
- CRA My Account மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது பேப்பர் (paper) மூலம் விண்ணப்பிக்கும் வழியும் உள்ளது.
4. குழந்தை பராமரிப்புக்கான உதவி தொகையை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்
Canada Child Benefit (CCB) பெற, நீங்கள் குறிப்பிட்ட படிவங்களை பூர்த்தி செய்து, கனடா வருவாய் முகமைக்கு (CRA) துணை ஆவணங்களை வழங்க வேண்டும்.
- T1 General (Tax Return) – வருமான வரி அறிக்கை.
- RC66 – Canada Child Benefits Application – CCB விண்ணப்ப படிவம்.
- RC66SCH படிவம் Canada Child Benefit (CCB) விண்ணப்பத்திற்கு தொடர்புடைய ஒரு இணைப்புப் படிவமாகும்.
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
- Social Insurance Number (SIN) – பெற்றோர் மற்றும் குழந்தையின் SIN. Temporary residence-ல் இருப்பவர்களுக்கு பெற்றோரின் SIN number மட்டும் போதுமானதாகும்.
- குடியுரிமை உறுதிசான்றுகள் (தற்காலிக குடியுரிமை, நிலையான குடியுரிமை அல்லது பாதுகாப்பு நபர்).
- வருமான உறுதிசான்று (Notice of Assessment).
- குடியிருப்பு சான்று– (Address proof )
- வங்கி கணக்கு – (Bank Account)
- இந்த படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும், இல்லையெனில் Canada Child Benefit (CCB) விண்ணப்பம் நிறைவடைய தாமதமாகும்.
- CRA My Account மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தால் விண்ணப்பத்தைச் செய்து 8 வாரங்களுக்குள் CCB பெற முடியும். ஆனால், சில நேரங்களில் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்போது சிலசமயங்களில் கொஞ்சம் நீண்ட காலம் ஆகலாம்.
- பேப்பர் வழியாக (RC66 படிவம்) விண்ணப்பித்தால் சில நேரங்களில் பொதுவாக 11-12 வாரங்கள் அல்லது அதற்கும் அதிகமாக நீண்டுகொண்டிருக்கலாம்.
- புதிய விண்ணப்பதாரர்கள், அதாவது குழந்தை பிறந்தவர்களுக்கான விண்ணப்பம் செய்யும் போது, இந்த விவரங்களை சரிபார்க்க CRA அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், 8-12 வாரங்கள் அல்லது அதற்கும் அதிகமாக நேரம் ஆகலாம்.
கனடாவில், குழந்தைகள் பராமரிப்பு உதவி திட்டங்கள் குடும்பத்தினரின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த உதவிகள் குடும்பங்களுக்கு குழந்தைகளின் பராமரிப்புக்கான செலவுகளை குறைக்க உதவுகிறது. இந்த உதவிகள், குறைந்த வருமான குடும்பங்களுக்கான முக்கிய ஆதரவாக செயல்படுகின்றன, மேலும் அனைத்து குடும்பங்களுக்குமான தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.