உங்களை பணக்காரன் ஆக தடுக்கும் 10 பழக்கங்கள்
1. முதலீடு செய்யாமல் இருப்பது:
- உங்கள் சந்தோஷத்திற்காக நீங்கள் செலவு செய்யவதில் தவறில்லை, ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எதிர்கால நன்மைக்காக முதலீடு செய்ய வேண்டும்.
- தேவைக்கு 50%, விருப்பத்திற்கு 30%, முதலீடுகளில் 15%, சேமிப்பில் 5% என உங்கள் மாத வருமானத்தை பிரித்து வைக்க வேண்டும்.
2. கிரெடிட் கார்டுகளை தவறாக பயன்படுத்துதவது:
- கிரெடிட் கார்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாமல் அதை வாங்கி பயன்படுத்தினால் அதன் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்.
- கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, ஒன்று அல்லது இரண்டு பொருட்களை வாங்கி, அதை முன்கூட்டியே செலுத்துவதாகும்.
- ஒருபோதும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை மற்றொரு கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டாம்.
3. அவரச காலத்திற்கான நிதி இல்லாமல் இருப்பது:
- திடீர் செலவு ரூ.2 லட்சம் ஏற்பட்டால் உங்களால் செலவழிக்க முடியுமா?, அதற்க்கு எப்பொழுதும் உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் 3 மாதத்திற்கான செலவு தொகை இருப்பில் இருக்க வேண்டும்.
4. மற்றவர்களை கவர்வதற்காக பொருட்கள் வாங்ககூடாது:
- உங்களைப் பற்றி கவலைப்படாதவர்களைக் கவர்வதற்காக உங்கள் வருமானத்தால் வாங்க முடியாத பொருட்களை வாங்கூடாது.
- உங்களின் குணத்தை பற்றி கவனிக்காமல், உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது, என்ன பொருட்கள் உள்ளன என்பதைத்தான் உங்கள் நண்பர்கள் கவனிப்பார்கள் என்றால்..
நீங்கள் உங்கள் நண்பர்களை மாற்ற வேண்டும்.
5. சந்தையில்(Market)வரும் புதிய பொருட்களை வாங்குவது:
- ஒவ்வொரு முறை சந்தையில் வரும் புதிய போன்கள் வாங்க தேவையில்லை, முடிவில் பழைய மாடல் மற்றும் புது மாடல் போன்கள் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.
- அடிக்கடி புது மாடல் வெளியிடுவது அந்த நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி பணம் செலவழிக்க பயன்படுத்தும் ஒரு யுக்தி.
6. அதிர்ஷ்டத்தை நம்புவது:
- அதிர்ஷ்டம் அல்லது குருட்டு நம்பிக்கை எப்போதும் உங்கள் வாழ்க்கையை உயர்த்தாது.
- உங்கள் மீது நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு உழைத்தால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.
7. தாமதமாக கட்டணம் செலுத்துவது:
- வாங்கிய கடனுக்கான வட்டி, கிரெடிட் கார்டு போன்றவற்றுக்கு தாமதமாக செலுத்தும் கட்டணம் உங்களை மேலும் கடனில் தள்ளும்.
- உங்கள் வருமானத்தை வட்டிக்கே அதிகமாக செலவிடும் கடனை அடைத்துவிடுங்கள்.
8. ஒரு வருமானத்தை மட்டும் வைத்து வாழ்க்கையை நடத்துவது:
- உங்களிடம் எவ்வளவு அதிகமாக வருமானங்கள் இருக்கிறதோ, அவ்வளவு பாதுகாப்பாக நீங்கள் இருப்பீர்கள்.
- சராசரி மனிதனுக்கு 7 விதமான வருமானங்கள் இருக்க வேண்டும்.
- உங்கள் மாத வருமானத்திற்காக நீங்கள் தினமும் உழைக்கும் ஒரு தொழிலை மட்டுமே நம்பி உங்கள் வாழ்க்கை இருக்கக்கூடாது.
9.பட்ஜெட் போடாமல் வாழ்கை நடத்துவது:
- உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பது.
- நிதி முடிவுகளை மாதத்தின் முதல் தேதியில் பட்டியலிட்டு அதன்படி உங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதைக் கண்கானியுங்கள்.
10. குறுகிய கால ஆசைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது:
- நீண்ட கால நிதி முதலீடுகளை விட (ஆடம்பர பொருட்களை வாங்குவது அல்லது அடிக்கடி விடுமுறைக்கு செல்வது) உடனடி மனநிறைவுக்கு முன்னுரிமை அளிப்பது.
- இவை நீண்டகால நிதி முதலீடு செய்வதில் ஆர்வத்தை குறைக்கும்.