நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி பலரின் புருவங்களை உயரச் செய்துள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் டிடிவி.தினகரன் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை இந்தத் தேர்தல் முடிவு சொல்லி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஏனென்றால், அமமுக மத்தியிலோ மாநிலத்திலோ ஆளுங்கட்சி இல்லை; ஆண்ட கட்சியும் கிடையாது. அக்கட்சி தொடங்கப்பட்ட இந்த 4 ஆண்டுகளில் வேறு எந்த ஒரு அரசியல் இயக்கத்திற்கும் ஏற்படாத கடுமையான நெருக்கடிகளை, அதிகாரத்தின் அத்தனை முனை அழுத்தங்களையும் சந்திக்கும் இயக்கமாகவே இருக்கிறது.
இவற்றையெல்லாம் தனது அசாத்தியமான புன்னகையுடன் டிடிவி.தினகரன் கடந்து சென்றாலும் அவர் மீது வீசப்படுகிற அவதூறுகளும் விஷமப் பிரச்சாரங்களும் கொஞ்ச நஞ்சமா?
சுயலாபத்திற்காக ஒருசிலர் கட்சி மாறியபோது அமமுக காலியானது என்றார்கள்!
சாதி கட்சி என்று சொல்லி குறுகிய வட்டத்துக்குள் அடைக்க பார்த்தார்கள்!
டிடிவி.தினகரன் வெளியிலேயே வருவதில்லை என்றார்கள்! !
அமமுக களத்திலேயே இல்லை என்று கூசாமல் பேசினார்கள்!
இப்படி விதவிதமாக வீசப்பட்ட விஷம அம்புகளை எல்லாம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி.தினகரன் எனும் ஆளுமை முனை மழுங்க செய்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் டிடிவி தினகரன் எனும் சக்தியை தவிர்க்கவே முடியாது என்று இத்தீர்ப்பின் மூலம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் தமிழக மக்கள்!
“ டிடிவி.தினகரன் மாதிரி ஒரு தலைவர் எங்களுக்கு இருந்திருந்தால் திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டி இருப்போம்” என்று இந்த தேர்தலின் முடி வு அ.தி.மு.க தொண்டர்களை வாய்விட்டு புலம்ப வைத்து இருப்பதே இதற்கு இன்னொரு சாட்சி!