2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆளுமை, சசிகலா. தேர்தலுக்கு முன்பே சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, அதிமுக-வை கைப்பற்றுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருப்தாக அறிக்கை விடுத்தார்.
தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பலத்த தோல்வியடைந்தது. அதன் பின்னர் அதிமுக தொண்டர்களின் கடிதங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சசிகலா தொலைபேசி மூலம் தொண்டர்களை தொடர்புகொண்டு பேச தொடங்கினார். இதன்மூலம் சோர்வுற்ற அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி, O.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகளை பலரை அக்கட்சியிள் இருந்து நீக்கனர்.
இந்நிலையில், சிறையில் இருந்து விடுதாலையான பின்னர் முதல்முறையாக தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் சசிகலா. இதில் தன் சிறுவயதில் இருந்தே எம்ஜிஆர் தன் தலைவர் என்றும், 1973ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி தன் கணவரின் விருப்பப்படி திமுக தலைவர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தனக்கும் மொழிப்போர் தியாகி நடராஜன் அவர்களுக்கும் சுயமரியாதை திருமண நடைபெற்றதாக கூறினார்.
1981ஆம் ஆண்டின் இறுதியில் உலகத்தமிழ் மாநாட்டில் முன்னாள் முதல்வரும் தன் நெருங்கிய தோழியுமான ஜெ.ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்ததாக தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் சசிகலா.
எம்ஜிஆர் மறைவின் பொழுது, ஜெயலலிதா மற்றும் TTV தினகரன் ஆகியோருடன் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றபொழுது அங்கிருந்தவர்களால் தடுக்கப்பட்டதாகவும், அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை அனுமதிக்கும் படி அங்கிருந்தவர்களுக்கு கூறியதாகவும் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த பேட்டியின் இரண்டாம் பாகம் இன்று இரவு 8:00 மணிக்கு தந்தி டிவியில் ஒளிப்பரப்பாகும்.
1 comment
I want to to thank you for this very good read!! I certainly enjoyed every little bit of it. I have got you book-marked to check out new stuff you postÖ