• Home
  • செய்திகள்
  • இதுவரை இன்று – 16 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today
அரசியல் இந்தியா செய்திகள்

இதுவரை இன்று – 16 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

ஆகஸ்ட் 1 முதல் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் – ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு நிறுவனம். Trending News Today

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு நடத்துவது தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடலாம் – பிரதமருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கூறினார் – டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி – தமிழக அரசு.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி – தமிழக அரசு.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய தமிழ்நாடு அரசு அனுமதி.

தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் திறக்க தடை தொடர்கிறது.

வரும் 19ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியீடு : காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் இந்திய செய்தியாளர் உயிரிழப்பு : காந்தஹார் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட பத்திரிக்கையாளர் டானிஷ் சித்திக் உயரிழந்தார்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் எம்பி சசிதரூர் சந்திப்பு.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் – புதுச்சேரி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை.

முன்னாள் அமைச்சர் கேடி.ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு  வழக்கில் ஆகஸ்ட் 5ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

Related posts

2021 Tamilnadu +12 State Board Result.. இன்று காலை 11:00 மணிக்கு வெளியீடு.. தெரிந்துகொள்வது எப்படி?

Admin

மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி TTV தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்!

Admin

இதுவரை இன்று – 7 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

Leave a Comment