• Home
  • செய்திகள்
  • IAS தேர்வில் 6 முறை தோல்வி | மனஉளைச்சலில் இருந்து மீண்டது எப்படி?
இந்தியா செய்திகள்

IAS தேர்வில் 6 முறை தோல்வி | மனஉளைச்சலில் இருந்து மீண்டது எப்படி?

how to overcome IAS exam failure

அபிஜித் யாதவ் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் (Civil Services Examination (CSE)) 2017ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 653வது இடத்தை பிடித்தும் அவரால் எந்த குடியியல் பணிகளிலும் இடம் பெற முடியவில்லை. IAS

5 வருடங்களாக இந்த UPSC தேர்வுக்கு உழைத்ததாக கோரும் அபிஜித் தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிடுவேன் என எண்ணியுள்ளார். 2014 ஆம் ஆண்டு தனது முதல் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் முதல் இரண்டு முயற்சிகளில், prelims எனப்படும் முதல் தேர்விலேயே தோல்வியை தழுவினார். அதன்பிறகு அடுத்த இரண்டு முயற்சிகளில், prelims தேர்வில் தேர்ச்சிபெற்று Mains தேர்வில் வெற்றியை இழந்துள்ளார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு நடத்த அணைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றபோதும், அவரால் எந்த குடியியல் பணிகளிலும் இடம் பெற முடியவில்லை. IAS

இந்த தோல்விகளால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளான அபிஜித், அதில் இருந்து தான் எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதையும் கூறுகிறார். தோல்வியில் இருந்து மீண்டு வர 10 வழிமுறைகளை அவர் கூறுகிறார்.

  1. நாம் கண்டிப்பாக தோல்வியை சந்திபோம், அதற்கு நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  2. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க கவனம் செலுத்த வேண்டும்.
  3. நம்மை நாமே மிகவும் நொந்து கொள்ளக்கூடாது.
  4. UPSC தேர்வுக்காக நாம் வளர்த்துக்கொண்ட திறமைகள் நாம் எங்கு சென்றாலும் நமக்கு உதவும்.
  5. இந்த தேர்வில் நாம் எப்பொழுது தோற்றாலும், நமக்கு பலத்த அடியை கொடுத்து, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதிருக்கும்.
  6. UPSC தேர்வுக்கான பயிற்சி என்பது, சிறிதளவு நம் வாழ்க்கைக்கான பயிற்சியாகவும் இருக்கும்.
  7. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திப்பதை நிறுத்துங்கள்.
  8. வாழ்க்கை மிக சுலபமான விஷயமல்ல.
  9. சுய மரியாதை இருக்க வேண்டும்.
  10. மற்றவர்களின் எதிர்பார்ப்புப்படி நாம் வாழமுடியாது.. நமக்கேற்ற வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும்.

அபிஜித் தற்பொழுது Pensil என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பின்னரும் வினைகளுக்கு அஞ்சாமல் நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்ற வாழ்க்கை படத்தை அபிஜித் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

English news source – The Better India How to overcome failure in IAS exam.

Related posts

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு: அரசு ஊழியர்கள் இருவர் கைது

Admin

Leave a Comment