மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகேதாட்டு அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த நீதிமன்றத்தின் முலமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். TTV Dhinakaran on Mekedatu dam issue
மேலும் தமிழ்நாட்டில் உள்ள வடமாவட்டங்களில் விவசாய பாசன ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கெண்டேய ஆற்றின் குறுக்கே, கொரோனா ஊரடங்கு காலத்தில் புதிய அணை கட்டியிருப்பதும், அதற்காக கடந்த பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியானது. அது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என Twitter அறிக்கையில் தெரிவித்துள்ளர்.