டோக்கியோவில் தொடங்க இருக்கக்கூடிய ஒலிம்பிக் போட்டிகள் பாராலிம்பிக் இந்திய அணியை, சேலத்தைச் சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் வழிநடத்தி இருக்கிறார். ஏற்கனவே பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் தமிழ்நாட்டு வீரர் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தார் மாரியப்பன்.
தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தர போட்டி நடத்தப்பட இருக்கிறது. ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு 24 இந்திய வீரர்கள் நான்கு மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற காத்திருக்கின்றனர்.
தொடக்க விழாவில் அந்தந்த நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கான தலைவன் தேசிய கோடியை ஏந்தியவாறு அந்த நாட்டு வீரர்களுடன் அணிவகுத்து செல்வது வழக்கம்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய கொடியை ஏந்திச் இந்திய அணியை வழிநடத்துவது இதுதான் முதல்முறை.
2021 டோக்கியோவில் நடைபெற இருக்கக்கூடிய பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியை மாரியப்பன் தங்கவேலு வழிநடத்துவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நடைமுறை எதன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது என்று பார்த்தல், நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடந்த ஒலிம்பிக் போட்டியில் சாதனை செய்த வீரர்களை கண்டறிந்து அவர்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றால், அவர்களை கௌரவப் படுத்தும் விதமாகவும் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பானது வழங்கப்படும்.
அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பார ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு F42 கேட்டகிரியில் பங்கேற்று கிட்டத்தட்ட 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை தேடித்தார்.
எனவே அந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு செய்த சாதனைக்காக தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவருக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்தது.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவை ஒலிம்பிக் போட்டியில் வழி நடத்துவது இதுவே முதல் முறை. எனவே ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதனுடைய சாதனையையும் மாரியப்பனுக்கு கிடைத்திருக்கக் கூடிய இந்த மரியாதையும் நினைத்து பெருமை கொண்டிருக்கிறது.