சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுகிறேன் என்று உதவிப் பேராசிரியர் விபின் புலியாவத் வீட்டில் என்பவர் ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்ந்தது முதல் சாதிய ரீதியிலான பாகுபாடு எதிர்கொண்டு வருவதாகவும் அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கே பணியாற்றுவோர் எதிர்கொள்ளும் சாதிய பாகுபாடு குறித்து ஆராய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் சேர்ந்தவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை ஐஐடி நிர்வாகத்திடம் கேட்டபோது உதவிப் பேராசிரியர் விபின் புலியாவத் வீட்டில் மின்னஞ்சல் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என பதில் அளித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் புகார் அளித்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Update: இன்று சென்னை IIT வளாகத்தில், Project Coordinator ஆகா பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவரது உடல் எறிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. எறிந்த உடலை கைப்பற்றி கோட்டுர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.