திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சில மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரு உருவ சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மா உணவகத்தை சேதப்படுத்துவது, புரட்சித்தலைவரின் சிலையை உடைப்பது என தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்தடுத்து நிகழும் அராஜகங்கள், அக்கட்சியை “தீயசக்தி” என எங்கள் தலைவர்கள் அடையாளம் காட்டியதற்குச் சாட்சியாக அமைந்திருக்கின்றன.
இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.” என்று Twitter-ல் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.