2021 சட்டமன்ற தேர்தல் அருகில் நெருங்கி கொண்டிருக்கும் வேலையில் அரசியல் கட்சிகளிடையே நடக்கும் சமூக வலைதள யுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த சமூக வலைதள யுத்தத்தில் உச்சகட்டமாக அமமுக IT Wing பிரிவு மாநில செயலாளர் T.P.முத்துக்குமார், புதுக்கோட்டை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் நேரடி தலையீடு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக திமுக மறைமுக கூட்டணி ?
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய அரிசி மூட்டையில் ‘நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்’ என்ற வாசகம் கிராபிக்ஸ் மூலம் இணைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் கடத்த மே 3-ம் தேதி முதல் பரவ ஆரம்பித்தது. திமுக IT Wing தான் இந்த கிராபிக்ஸ் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.
Source : Asianet News – ‘நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்…’எடப்பாடியாரை வெறுப்பேற்ற திமுக செய்த தில்லுமுல்லு அம்பலம்..!
திமுக தான் இந்த கிராபிக்ஸ் செய்துள்ளது என்ற செய்திகள் வெளியான பொழுதும், திமுக தரப்பில் இருக்கும் ஒருவர் மீது கூட வழக்கு பதியாதது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுகவிற்கு, திமுகவிற்கு மறைமுக உறவு இருக்கக்கூடுமோ என்ற மக்களின் சந்தேகத்தை உறுதிசெய்வதாக இருக்கிறது.
அமமுக நிர்வாகி கைது
ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்த இந்த படத்தை அமமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர் முத்துக்குமாரும் தன் Facebook பக்கத்தில் கடத்த மே 5-ம் தேதி அன்று பகிர்ந்துள்ளார். இதை ஒரு காரணமாக வைத்து தான் அவர் மீது வழக்கு பதியவைத்து மே 12-ம் தேதி அன்று புதுக்கோட்டை காவல்துறையினர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்துக்குமார் வீட்டிற்கு விடியற்காலை 5:00 AM மணிக்கே சென்று வலுக்கட்டயமாக கைது செய்தனர்.
முத்துக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV.தினகரன் உடனடியாக அறிக்கை விட்டார். மேலும் மாவட்ட செயலாளர்கள், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் வேலு கார்த்திகேயன் தலைமையிலான வழக்கறிஞர்களை நேரில் அனுப்பி முத்துக்குமாரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் அமமுக தொண்டர்கள் #முத்துக்குமாரை_விடுதலைசெய் என்று Hashtag மூலம் இந்திய அளவில் Trending செய்தனர்.
யார் இந்த முத்துக்குமார்?
விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து தற்பொழுது மாநில IT விங் செயலாளராக உள்ளார். நிர்வாகளிடத்திலும், தொண்டர்களிதிலும் அன்புடன் நெருங்கி பழகக்கூடியவர். அமமுக IT விங்கிற்கென்று தனி வலைத்தளத்தை AMMKITwing.in என்று உருவாக்கினார். TTV.தினகரன் எந்த அறிக்கை விட்டாலும், பொதுக்கூட்டத்திற்காக எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அதை கண் இமைத்த நேரத்தில் இந்திய அளவில் Twitter Trending செய்யக்கூடிய அளவிற்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தன் நிர்வாகத்திறனால் ஊக்கப்படுத்தி வைத்துள்ளார் முத்துக்குமார். சமீபத்தில் ரெட் T-Shirt முறுக்கு மீசையுடன் TTV.தினகரனை படம் எடுத்து வெளியிட்டவர் இவர் தான்.
கொரோனாவால் ஊரடங்கு ஏற்பட்டபொழுது அமமுக தொண்டர்கள் மாவட்டந்தோறும் வழங்கிய நலத்திட்ட உதவிகளை #மக்கள்நலனில்_அமமுக #AMMKcaresTNpeople என்ற Hashtag மூலம் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்தார்.
மேலும் ஊரடங்கு சமயத்தில் அரசின் நிர்வாக கோளாறுகளையும் இந்திய அளவில் Trending செய்தார். கொரோனா கண்டறியும் Rapid Kit-ல் ஊழலை நடந்திருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து TTV.தினகரன் தமிழக அரசிடம் உண்மை நிலவரத்தை விளக்குமாறு கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்நது #CoronaScamByTNgovt என்ற hashtag மூலம் IT விங் வைத்து ட்ரெண்டிங் செய்தார்.
ஊரடங்கு சமயத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதை கண்டித்து TTV.தினகரன் கண்டன அறிக்கை வெளியிட்டார், அதை தொடர்ந்து #TTVcondemnsTASMACopening என்ற ட்ரெண்டிங் செய்தார். இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று #AMMKwelcomesHCVerdict என்று ட்ரேடிங் செய்து, திமுக கூட சில சமயங்களில் கண்டும்காணாமலும் போகும் அதிமுக அரசின் தவறுகளை சமூக வலைத்தளத்திலும் மக்கள் மத்தியிலும் வெளிகொண்டுவந்து அதிமுக-விற்கு பெரும் சவாலாக அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை கட்டமைத்துள்ளார் முத்துக்குமார்.
இந்த காழ்ப்புணர்ச்சியால் அதிமுக தன் அதிகார பலத்தை பயன்படுத்தி முத்துக்குமாரை கைது செய்து அமமுக IT விங்கிற்கு பயம் காட்ட நினைத்துள்ளது. ஆனால் முத்துக்குமார் கைது செய்யப்பட்டபோது சமூக வலைத்தளத்தில் அமமுக IT Wing நிர்வாகிகள் செயல்பட்ட வேகத்தை பார்க்கும் போது, இனி அவர்களின் வியூகம் அதிமுகவிற்கு வருங்காலங்களில் மேலும் சவாலாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
கொரோனா பாதிப்பினால் இனி கள அரசியலை விட சமூக வலைத்தளத்தில் தான் அரசியல் கட்சிகள் அதிக கவனம் செலுத்தவுள்ளன. வட மாநில கம்பெனிகளை நம்பி இருக்கும் திமுகவிற்கும், அதிமுகாவிற்கும் பெரும் சவாலாக, கட்சி தொண்டர்களை நம்பி இயங்கும் அமமுக IT Wing செயல்பாட்டை ஜனநாயக ரீதியாக பாராட்டியாகவேண்டும்.