சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது சசிகலா 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது ஆனால் அவர் இன்னும் வெளியே வரவில்லை.
பாஜக மேலிடம்
இந்நிலையில் பாஜக மேலிடத்தின் பார்வை சசிகலா பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர்கள் தொடங்கி கீழ்மட்ட தொண்டர்கள் வரை பலரும் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பதால் அதிமுகவில் கோஷ்டி மோதல் நிலவி வருவதாகவும், அதிமுகவை பலப்படுத்த சசிகலாவை விடுதலை செய்யலாம் என்று பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒருங்கிணையும் அதிமுக
அதிமுகவை ஒருங்கிணைத்தால் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக பயன்படும் என்று பாஜகவினர் கணிப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி TTV தினகரனை தனது வக்கீல் மூலம் சட்டபூர்வமாக தொடர்புகொண்டு சசிகலா உற்சாகமாக கலந்தாலோசித்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எடப்பாடியை வைத்து அதிமுகவை நிலைநாட்டி விட்ட போதிலும் அதில் ஓபிஎஸ், விஜயபாஸ்கர் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கியுள்ளன. டெல்லியில் தனது மகன் ஓபி.ரவீந்திரநாத்தை பவர் சென்டராகி தமிழகத்தில் தனது பிடியை தக்கவைத்துக் கொள்ளலாம் என ஓபிஎஸ் அணியினர் கணக்குப் போட்டு வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ்-க்கு அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் ஆதரவு என்று வரும்போது அது சொற்பமாகவே இருக்கிறது என வந்துகொண்டிருக்கும் ரகசிய தகவல்களும் பாஜக மேலிடத்தை யோசிக்க வைக்கிறது.
மையப்புள்ளி
எடப்பாடி அணியினர், அவரது ஆதரவாளர்கள், அதிருப்தியாளர்கள், ஓபிஎஸ் அணியில் உள்ளவர்கள் என கணிசமானோர் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவர்ளே. எனவே சசிகலா வெளியே வந்து கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றால் பெரும்பாலானோரை ஒருங்கிணைக்க முடியுமா என்கிற கணக்கில் ஆழ்ந்துள்ளது பாஜக மேலிடம்.
சசிகலா வந்தால் எடப்பாடி, ஓபிஎஸ் ஓரங்கட்டப்படலாம் என்பதால் இருவருமே ஓரணியில் கைகோர்க்க வாய்ப்பு ஏற்படலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முதல்வராக முடியாது
சசிகலா விடுதலை ஆனாலும் தண்டிக்கப்பட்டவர் என்பதால் முதல்வராக அவரை முன்னிறுத்த முடியாது. எனவே எடப்பாடியை தவிர்த்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வேறொருவரை முன்னிறுத்துவது என்பது பற்றியும் யோசித்து வருகிறார்களாம். எடப்பாடிக்கு கட்சியின் மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிறையில் இருந்தபோது அவரது குடும்பத்தை கடுமையாக விமர்சித்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி போன்றோர் கழற்றி விடலாம் என்ற பேச்சும் எழுந்தது.
சமரச திட்டம்
ஆனால் பாஜக தலையிட்டு ராஜேந்திர பாலாஜியின் தக்கவைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யும் என்று கூறப்படுகிறது. இல்லையேல் பாஜகவிலேயே அவருக்கு அடைக்கலம் கிடைக்கலாம் என்கிற கருத்தும் பரவலாக இருக்கிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் ஊடகங்களை வைத்து திமுகவை குறைவாக எடை போட்டுவிட முடியாது என்றும் மக்களின் மனநிலை மாநில அரசை மாற்றும் நிலையில் தான் உள்ளது என்றும் தகவல்கள் டெல்லிக்கு பறந்துள்ளன. ஆனால் கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதை அறிந்து தனது வியூகத்தை மாற்றிக் கொள்வாரா என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. எனவே ரஜினி கமல் போன்றோர் வந்தாலும் மேல்தட்டு நடுத்தர மக்களிடையே புதிய வாக்காளர்களாக உள்ளவர்கள் மத்தியில் மட்டுமே சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று வரும் தகவல்களையும் டெல்லி ஆராயத் தவறவில்லை.
கூட்டணி ஆட்சி
எப்படியாயினும் அடுத்தமுறை தமிழகத்தில் பாஜக இடம்பெறாத ஒரு ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதில் டெல்லியில் மிகவும் தீவிரமாக இருப்பதால் சசிகலா விடுதலை குறித்து TTV தினகரன் அணி உற்சாகமாக இருக்கிறதாம்