கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக தல அஜித் ஒரு கொடியே 27 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாயை (Rs.1,27,50,000) நன்கொடை வழங்கி உள்ளார்.
தமிழ் திரையுலக நடிகர்களில் தற்பொழுது வரை நடிகர் அஜித் தான் அதிக தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் நிவாரண நிதி – ரூ.50 லட்சம்
பிரதமர் நிவாரண நிதி – ரூ.50 லட்சம்
FEFSI தொழிலாளர்களின் நிவாரண நிதி – ரூ.25 லட்சம்
PRO யூனியனுக்கான நிதி – ரூ.2.5 லட்சம்
தல ரசிகர்கள் அவரின் உதவியை பாராட்டி ட்விட்டரில் #PerfectCitizenThalaAJITH என்று ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
மேலும், ஆளில்லா விமானங்களை ஆய்வு செய்யும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட குழு ‘தக்ஷா‘. இந்த குழுவிற்கு தலைமை ஆலோசகராக செயல்படுபவர் தல அஜித். அந்த குழு உருவாக்கிய ஆளில்லா குட்டி விமானம், சென்னையின் உட்பட பல மாவட்டங்களில் முக்கிய இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.