• Home
  • இந்தியா
  • பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன
இந்தியா செய்திகள்

பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன

பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், கொரோனா தடுப்பு அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, போலீஸ் அவர்களுக்கு உணவு,, பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் டில்லியில் நடந்துள்ளது.

சீனாவின் வூஹானிலிருந்து பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேலையில்லாமல் கூலித்தொழிலாளிகள் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் கூலித்தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்த பிரசாந்த், தில்சாத் என்ற இரு இளைஞர்கள், ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் வீட்டில் உணவுக்கு தவித்துள்ளனர். 4 நாட்களாக பசியால் வாடிய அவர்கள், டில்லி போலீசாரின் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்கி உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்து, உண்மை நிலையை அறிந்து கொண்ட போலீசார், அவர்களுக்கு மனமுவந்து உதவி செய்துள்ளனர்.

பசியிலும் மனம் தளராத அந்த இரு இளைஞர்களை பாராட்டிய போலீசார், அவர்களுக்கு உணவு வாங்கி முதலில் அவர்களது பசியை போக்கினர். மேலும், ரூ.1000 பணம் கொடுத்து உதவியதுடன், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அளித்துள்ளனர். போலீசாரின் இந்த நெஞ்சை நெகிழ்ச்சி செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலரும் தங்களது பாராட்டுக்களை போலீசாருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

அள்ளி கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் : ஒரு கோடிக்கு மேல் கொரோனா நிவாரண நிதியுதவி

Admin

“வெளியில் வரவேண்டாம்” – கை எடுத்து கும்பிட்ட தெலுங்கானா போலீசார்

Admin

விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்

Admin

Leave a Comment