கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் இன்னும் 28 நாட்கள் யாரையும் தங்க வைக்க வேண்டாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சமூக பரவலை தடுக்கும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து நெல்லைக்கு வந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம், என்ஜிஓ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கரை ஒட்டி தனிமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியில் வர தடை விதித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து 82 பேர் நெல்லைக்கு வந்துள்ளனர் அவர்கள் எங்கும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் நேரில் வந்து அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அந்த ஊர்க்காவல் படையினர் வந்து அந்த பகுதியில் அடிக்கடி போய் கண்காணிக்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் மாவட்ட நிர்வாகத்துடன் அனுமதி பெற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் உடனடியாக கலந்து கொண்டு உடனடியாக தங்களது இல்லங்களுக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.