• Home
  • அரசியல்
  • “இங்க வாடா”.. பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

“இங்க வாடா”.. பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

நீலகிரி: பழங்குடியினர் சிறுவனை கூப்பிட்டு தன்னுடைய காலில் இருந்த செருப்பை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இது மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோயில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்க இருக்கிறது.

இதற்காக யானைகள் எல்லாம் வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்தன. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

செருப்பு

நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.. அவரை காண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்… வரும் வழியில் அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. பெல்ட் போட்ட செருப்பினை அமைச்சர் அணிந்திருந்தார். அப்போது தனது செருப்பின் பெல்ட்டை கழற்றிவிடுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு சொன்னார்.

சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதால் பழங்குடியின மக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.. சுற்றியிருந்தவர்களுக்கும் இது அதிர்ச்சியை தந்தது. அமைச்சரின் இந்த செயல் அனைவரின் கண்டனத்தையும் பெற்றது

Related posts

அமைச்சர் K.A.செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆதித்தமிழர் பேரவையினர் கைது

Admin

Leave a Comment