சென்னையில் போலீசார் எனக்கூறி ஹவாலா பணம் ரூ.98 லட்சம் கொள்ளையடித்த கும்பலை, போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 11ம் தேதி கீழ்ப்பாக்கம் வழியாக அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்த கோபிநாத் என்ற இளைஞரை போலீசார் எனக்கூறி எட்டு பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றி சென்றுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.98 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பியோடினர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கலந்தர், மற்றும் சாதிக் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, கோவாவிற்கு தப்பிசெல்ல முயன்ற கலந்தரின் கூட்டாளிகள் மூவரையும், அவர்களுக்கு விமான நிலையத்தில் தகவல் சொல்லும் ஓட்டுநர் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் பணமும் 500 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், சினிமாவில் பயன்படுத்தக்கூடிய வாக்கி டாக்கி, துப்பாக்கி போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்