மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். தமது கட்சியின் உயர்மட்டகுழு கூட்டத்தில் ,நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது என்று எடுக்கப் பட்ட முடிவை ஸ்டாலினிடம் அவர் அப்போது தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கட்சி நலனைவிட நாட்டு நலன் என்கிற அடிப்படையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்தார் .