தேர்தல் பறக்கும்படையினரின் வாகனச் சோதனை சிறுதொழில்களில் ஈடுபட்டு வருபவர்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், தஞ்சாவூரில் போட்டியிடும் தமாகா வேட்பாளரின் பெயரை நாளை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் பறக்கும்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபடும்போது சிறுதொழில்களை நடத்தி வருபவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.