நியூசிலாந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு உயிரிழந்த 49 பேரில் 7 பேர் இந்தியர்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்பவர், பட்டதாரி பெண் என நான்கு பேருடன் இந்தியாவை பூர்விகமாக கொண்ட மூன்று பேரும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.