• Home
  • அரசியல்
  • நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு; இறந்தவர்களில் பெரும்பாலோர் அகதிகள்
அரசியல் உலகம்

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு; இறந்தவர்களில் பெரும்பாலோர் அகதிகள்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த துப் பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்த வர்களில் பெரும்பாலோர் பெற் றோர், குழந்தைகள், அகதிகள் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 44 பேர் மாண்டனர்.
தற்போது இறந்தவர்களை அடையாளம் காணும் சிரமமான பணி தொடங்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் பலர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள். நேற்று காலை வரை ஒருவர்கூட அடையாளம் காணப்படாததால் இறந்தவர்களின் குடும்பங் களுக்கு தகவல்  தெரிவிக்கப்பட வில்லை.
டாவுட் நாடி என்பவர் மட்டும் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்று  அதி காரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் பிறந்த இவர், சோவியத் ஊடுருவலி லிருந்து தப்பிக்க 1980ல் குடும் பத்தோடு நியூசிலாந்துக்கு குடி பெயர்ந்தார். உள்ளூர் ஆப்கானிஸ் தான் சங்கத்துக்கு அவர் தலை வராகவும் இருந்தார்.
பள்ளிவாசலில் துப்பாக்கிக் காரன் சுட்டபோது மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதே போன்று நயீம் ர‌ஷீத் என்பவரும் துப்பாக்கிக்காரனை சமாளிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். 
அவர் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகிக் கின்றனர்.
உயிர் தப்பிய மலேசியர்களில் ஒருவரான நூர் யாஹ்யா ஹம்சா, துப்பாக்கிக்காரன் சரமாரியாகச் சுடுவதை இரண்டு வினாடிகளில் உணர்ந்துகொண்டதாக தெரிவித் தார்.

Leave a Comment